Select Page

ரயில் பயணம்

மாதம் ஒருமுறை வீடு சென்று திரும்புவது வழக்கம். அதுவும் ஆடி மாதம் முடித்தவுடன் ஒரு மாதமாக தேக்கி வைத்திருந்த அனைத்து நல்ல காரியங்களும் வரிசையாக வைத்தார்கள். எனவே விழாவை சிறப்பித்து வரலாம் என்று எண்ணி தோரயமாக 10 நாட்கள் விடுப்பு எடுத்து சில ஊருக்கு சென்றேன். விழாவும் சீரும் சிறப்புமாக நடந்தது. எல்லா நல்ல காரியமும் முடிந்தவுடன் சென்னை திரும்ப முடிவு செய்தேன். வழக்கம் போல பயணசீட்டு முன்பதிவு செய்யலாம் என்று இந்திய ரயில்வே இணைத்தளம் சென்றேன். முகுர்த்த நாள் என்பதால் அணைத்து ரயிலும் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. என்னை போல் அனைவரும் விழாவை சிற்பிக்க சென்றார்கள் போலும். சரி அவசர பயணசீட்டு (தட்கல்) பெற்று விடலாம் என்று எண்ணி என் நண்பனுக்கு அழைப்பு விடுத்தது எனக்கும் என் மச்சானுக்கும் முன்பதிவு செய்ய கூறினேன். அவனும் நான் பாத்து கொள்கிறேன் என்றான்.

அடுத்தநாள் காலை 10.05 மணிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது “ரசீது முன்பதிவு செய்து விட்டேன்” என்று நண்பனிடம் இருந்து. சிறிது நேரம் கழித்து என் அலைபேசிக்கு IRCTC இடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. திரந்து பார்த்தல் காத்திருக்கும் பட்டியலில் 9, 10 இருக்கைகள் கிடைத்தது. நண்பன் முன்பதிவு செய்து விட்டேன் என்றான் ஆனால் காத்திருக்கும் பட்டியலில் இருப்பதாக குறுஞ்செய்தி. ஒரே குழப்பம். நண்பனுக்கு அழைப்பு விடுத்தேன். அவன் நண்பா “மன்னிச்சு”. நான் சரியாக பார்க்க வில்லை என்றான். மனதுக்குள் ஒரு குபீர் உணர்ச்சி. இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் இல் கடைசி ஒரு பந்துக்கு பாகிஸ்தான் 2 ரன் எடுத்தல் வெற்றி என்ற நிலையில் நெஹ்ரா பந்து வீச ஓடிவந்தாள் எப்படி நம் மனநிலை இருக்குமோ அதே உணர்ச்சி. ஒரு வழியாக அட்டவினை வெளியிட்ட பிறகு எனக்கும் என் மச்சானுக்கும் 19, 104 இருக்கைகள் DT7 பெட்டியில் தூத்துக்குடி சென்னை இணைப்பு ரயிலில் கிடைத்தது. நிம்மதி பெருமூச்சு (இப்போதைக்கு).

அடுத்த நாள் மதியம் 12.15 க்கு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையம் வரவேண்டும். நானும் என் மச்சானும் 12.10 க்கு தயாராக ரயில் நிலையத்தில் காத்து கொண்டி இருந்தோம். வழக்கம் போல் ஒலிபெருக்கியில் ஒரு சத்தம் “வண்டி எண் 16130/16128 குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் விரைவு ரயில் 1.15 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” டிங் டாங் டொஇங்க்.

என்னடா இவன் தூத்துக்குடி சென்னை இணைப்பு ரயிலில் முன்பதிவு செய்து விட்டு குருவாயூர் விரைவு ரயிலை பத்தி பேசுகிறான் என்று நினைக்க வேண்டாம். குருவாயூர் விரைவு ரயில் மற்றும் தூத்துக்குடி சென்னை இணைப்பு ரயில் இரண்டும் இணைத்து ஒரே ரயிலாக தான் பயணிக்கும்.

ஒரு மணி நேரம் காத்திருந்த பிறகு ரயில் வந்தது. நாங்கள் எங்கள் பெட்டில் ஏறினோம். இருக்கை 19 க்கு சென்று பார்த்தோம். அங்கு ஒரு பெரிய குடும்பமே அமர்ந்து இருந்தார்கள். சுமார் 15 நபர் 8 இருக்கையில். இதை பார்த்ததும் நானும் என் மச்சானும் “அப்பா சாமி, ரொம்ப குஷ்டம் அடா” என்று கூறி இருவரும் இருக்கை 104 கு சென்றோம். அங்கு தான் ஒரு அதிர்சிகரமான விஷயம். எங்கள் இருக்கையை காணோம். உண்மைதான் அந்த போட்டியில் 90 இருக்கைகள் தான் இருந்தது. வடிவேல் கூறுவது போல “என் கிணற்றை காணோம்” என்று இருவரும் திகைத்து நின்றோம்.

சரி காலியாக இருக்கும் இருக்கையில் அமரலாம் என்று முடிவெடுத்து 71, 72 இருக்கையில் அமர்ந்தோம். TTE வருவார், அவரிடம் என்ன என்று கேக்கலாம் என்று நினைத்தேன். சிறிது நேரம் கழித்து சௌச்சாலயம் போக எழுந்து போனால் மற்றொரு அதிர்ச்சி. அந்த பொட்டிக்கு வர போக வழியே இல்லை. அடைக்கப்பட்டு இருந்தது. செத்தான் சேகரு என்று நினைத்தேன். அடுத்து மணப்பறை நிலையம் வந்தது. என் மச்சானிடம் கூறிவிட்டு அடுத்த பொட்டிக்கு இறங்கி ஏறினேன். ரயில் கிளம்பியது. DT6 இல் என்னை போல் ஒருவன். அவன் இருக்கை என் 107. அவனும் திசை தெரியாமல் விழி பிதுங்கி நின்றான். வாங்க பாஸ் வாங்க பாஸ் என்று கூறி இருவரும் TTE ஐ தேடி ஓடும் ரயிலுக்குள் எங்கள் நடை பயணத்தை ஆரம்பித்தோம். ஓடினோம் ஓடினோம் DT1 வரையிலும் ஓடினோம். எந்த பொட்டியிலும் TTE இல்லை. கடலையே இல்லையாம். ஹாம்.

அடுத்து திருச்சி ரயில் நிலையம் வந்தது. நான் DT7 கு வந்து என் மச்சானிடம் விளக்கினேன். பிறகு திருச்சி ரயில் நிலைய அதிகாரியிடம் புகார் கொடுக்கலாம் என்று தேடினேன். அந்த நேரம் வெள்ளை நிற சொக்கா, கருப்பு நிற காற்சட்டை, சிகப்பு நிற டை அணிந்து கையில் வாக்கி டாக்கி உடன் ஒருவர் நடந்து வந்தார். அவர் பார்க்க நான் கேள்வி கேட்கவே அளவெடுத்து செய்தது போல இருந்தார். அவரிடம் சென்று கேட்டேன். அவர் ஸ்ரீரங்கத்தில் TTE வருவார் என்று கூறினார். அவரை நம்பி நேரா DT7 கு சென்று அமர்ந்தேன். அடுத்து ஸ்ரீரங்கம் வந்தது. இறங்கி பார்த்தேன். ஒரு ஈ காக்கா கூட இல்லை. அந்த என்னை” போல் ஒருவன்” வந்தான். பாஸ் வாங்க, குளிர்சாதன பெட்டிக்கு போகலாம் என்று அழைத்தான். சரி கழுத போய்தான் பாக்கலாம் என்று கிளம்பினேன். இருண்டு ரயில் ஒன்றாக இணைந்து ஓடுவதால் மிக நீளமாக இருந்தது. கிட்ட தட்ட 10 பொட்டிகள் கடந்து சென்றோம் 2 நிமிடங்களில். எவ்வளவு கஷ்டம். இது ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு புரியும். குறிப்பாக தொப்பை உள்ள மக்களுக்கு. அங்கு சென்றதும் அந்த “என்னை போல் ஒருவன்” குளிர்சாதன பொட்டியில் இரு பார்த்தான். அங்கயும் TTE இல்லை. சரி இதில் ஏறுவோம். எப்படியும் TTE வருவாரு. அப்ப கேக்கலாம் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில் வந்தார். என் கண்ணனுக்கு தெய்வமாக தெரிந்தார்.

அவரிடம் விளக்கினேன். அவர் மற்றொருவரிடம் DT7-DT1 கு யாரு பா TTE என்று கேட்டார். அதற்கு அவர் யாருமே இல்ல என்றார். அய்யோ என்று நினைத்து கொண்டேன். பின்னர் அந்த தெய்வம் எங்களை “S1 இல் காத்திருங்கள், நான் அட்டவணை பார்த்து உங்களுக்கு இருக்கை தருகிறேன்” என்றார். நாங்கள் இன்னும் இரண்டு பொட்டிகள் பின் சென்று காத்திருந்தோம். ரயில் கிளம்பியது. வெகு நேரம் ஆனது. அனால் தெய்வத்தை காணவில்லை. அந்த சமயம் மற்றொருவர், கையில் பயணிகள் அட்டவணை வைத்துகொண்டு சென்றார். அவரை பிடித்தோம். அவர் “தம்பி நான் guard, இணைக்கு TTE யாரும் இல்ல. அதான் என்ன அனுப்பி இருகாங்க. DT7 கு தான் வரேன்” நீங்க போங்க நான் வந்து உங்களுக்கு இருக்கை தரேன் என்றார். “எங்க வயற்றில் பால் வாத்த ராசா” என்று நாங்கள் 13 போட்டிகள் தாண்டி ஓட தயார் ஆனோம். அடுத்து அரியலூர் நிலையம். அங்கு 2 நிமிடம் தான் ரயில் நிற்கும். அங்கு தான் இறங்கி ஓட வேண்டும் நாங்கள்.

அரியலூர் வர இன்னும் 5 நிமிடம் இருக்கும் நேரத்தில். அந்த guard வந்தார். மொத்தம் எத்தனை பேரு என்றார். நாங்கள் 4 பேரு சார் என்றோம். சரி அரியலூரில் அவர்களை இங்க வர சொல்லுங்கள். உங்களுக்கு இங்கயே இருக்கை தரேன் என்றார். “புண்ணியமா போச்சு சாமி” என்று நினைத்தேன். அவர் S1 இல் இருந்துன் D1 கு அழைத்து சென்றார். அங்கு இருக்கைகள் உறுதி செய்து தந்தார். உடனே என் மச்சானுக்கு அழைப்பு விடுத்தது “மச்சான், அரியலூர் நிலையத்துல இறங்கி D1 பொட்டிக்கு வாங்க, இங்க இருக்கைகள் கிடைச்சுருச்சு” என்றேன். அவர் சரி என்றார். அவர் நிலைமை இன்னும் மோசம். 2 நிமிடத்தில் 2 பைகளுடன் 15 பொட்டிகள் கடந்து வரவேண்டும்.

அரியலூர் வந்தது. ரயில் நிற்பதற்குள் இறங்கி ஓட ஆரம்பித்தார் என் மச்சான். நாய் துரத்தினால் எப்படி ஓடுவாரோ அப்படி ஒரு ஓட்டம். அவர் வந்து சேர்வதற்குள் ரயில் நகர ஆரம்பித்து. அவரும் அவசரமாக ஓடி வந்தி ஏறினார். சபாடா, என்று இருக்கையில் அமர்ந்தோம். நேரம் 4 ஐ தாண்டியது. கிட்டதட்ட 3 மணி நேரம் இருக்கை இல்லாமல் பயணம். ஒரு வழியா அமர்ந்து சிறிது நேரம் கழித்து அம்மா செய்து கொடுத்த மதிய உணவை மாலை சாப்பிட்டோம். பிறகு பக்கத்துக்கு இருக்கையிளிருந்த குட்டி பாப்பாவிடம் விளையாண்டு நேரத்தை களித்தேன்.

இதில் என்ன வேடிக்கை என்றால், நாங்கள் முன்பதிவு செய்தது தூத்துக்குடி சென்னை இணைப்பு ரயிலில், ஆனால் பயணம் செய்தது குருவாயூர் விரைவு ரயிலில்.

DT பொட்டிகள் தூத்துக்குடி சென்னை இணைப்பு ரயிலோடது. D பொட்டிகள் குருவாயூர் விரைவு ரயிலோடது. என்னதான் இரண்டும் ஒன்றாக ஓடினாலும், வேறு வேறு ரயில் தான்.

குச்சு குச்சு என்று ஒரு வழியாக 9.30 மணிக்கு சென்னை வந்து செந்தேன். என்ன ஒரு வித்தியாசமான அனுபவம்.

நன்றி..!!!


எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும் ?

About The Author

It's me, Nivas Baskaran , a product of the 90's living in Bangalore. This is my personal blog and I'm here to post some cool stuffs. I love spending time with my Friends. Jovial in nature. I love Tea/Coffees. Ping me to know more about me :P

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *


Subscribe for Updates

Like Us on Facebook

Categories