Select Page

XPLORER – CHAPTER 5

அரங்கத்தை சுத்தம் செய்த ராக்கி யும் லோகு வும், தன் இருக்கைகளில் அமர்ந்தனர். வழக்கம் போல தன் வேலையை செய்துகொண்டு இருந்தனர். அப்போது,

ராக்கி: “லோகு, நம்ம 2 பேரு மட்டும் வேல செஞ்சா பத்தாது டா. இன்னும் கொஞ்ச பேரு வேணும் டா. உதவிக்கு ஆகும் டா.”

லோகு: “கரெக்ட் மச்சி, நானும் அதே தான் நெனச்சேன். நீ சொல்லிட்ட. க.க.க.போ”

ராக்கி: “இன்னும் நெறைய வேல இருக்கு டா.”

லோகு: “மச்சி இணைக்கு நைட் எ facebook, twitter நு எல்லா நெட்வொர்க் ல யும் விளம்பரம் பண்ணிறேன் டா.. அப்பறம் சில புரோக்கர் பசங்க கிட்டயும் சொல்றேன் டா..”

ராக்கி: “புரோக்கர் ஆ? யாரு டா?”

லோகு: “அதான் டா.. கோன்சுல்டன்சி(consultancy)நு சொல்லுவாங்களே, அத சொன்னேன் டா”

ராக்கி: “மச்சி, இது சரி பட்டு வரும் நு எனக்கு தோனல டா”

லோகு: “ஏன் டா?”

ராக்கி: “இல்ல டா.. நாம இப்ப பண்ண போறதது பணத்துக்காக இல்ல டா… இது வேற டா. எல்லாத்தையும் நல்லபடியா காப்பாத்த பண்றது டா. இதுக்கு வெளில விளம்பரம் பண்ணியோ, இல்ல ஆளுட்ட சொல்லி எடுத்தா நல்லா இருக்காது டா.”

லோகு: “அதுக்கு என்ன பண்ணலாம் நு சொல்ற?”

ராக்கி: “நம்ம பிரண்ட்ஸ் அ கூபுடுவோம் டா. அவங்க நம்மகாக வேல பாப்பாங்க. இண்டரெஸ்ட் ஓட வேல பாப்பாங்க.”

லோகு: “டேய், இருக்கற வேலைய விட்டுட்டு யாரு டா வருவா?”

ராக்கி: “கேப்போம், வரவங்கள வச்சுகுவோம், பத்தலைன வெளி ஆள எடுத்துக்கலாம்.”

லோகு: “சரி மச்சி, கேப்போம், 10 பேரு வந்தா போதும் டா”

ராக்கி: “மோர் தென் எனப் டா”

நண்பர்கள் வட்டத்தை 2 ஆகா பிரித்துகொண்டனர். ஒரு பாதி நண்பர்களை ராக்கி உம், மறு பாதி நண்பர்களை லோகு வும் தொடர்புக்கொள்ள முடிவு செய்தனர். தன் வேலையை முடித்து மாலை இருவரும் வீடு திரும்பினர். தன் அரைக்கு சென்று சற்று நேரம் ஓய்வு எடுத்தான் ராக்கி.

இரவு உணவு உண்ட பிறகு, ராக்கி நண்பர்களுக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தான். அனைவரிடமும் எல்லா விவரங்களையும் கூற, ஆறு நண்பர்கள் ஒப்புக்கொண்டனர். ராக்கி விவரங்களை கூற, அனைவரும் “கவுன்ட் மீ இன்”, “இ அம வித் யு டா”, “மச்சி, செத்தாலும் சேந்து சாகலாம் டா”, “எப்ப டா வரணும்”, “இதோ இப்பவே கெளம்பிட்டேன் டா”, “நான் எப்பயும் ரெடி.” என தன் பதிலை தெரிவித்தனர்.

ராக்கி, “நான் எப்ப, எங்க வரணும் நு இன்போ சொல்றேன் டா” என கூறினான். எல்லாம் பேசி முடித்து விட்டு “பிரண்ட்ஸ் ஆர் அல்வேஸ் கிரேட்” என்று தனக்கு தானே சொல்லிகொண்டான் வாயில் புன்சிரிப்புடன்.

லோகு, ராக்கி போல் இல்லாமல் ஒரு படி மேல் சென்றான். நண்பர்களை அன்று இரவு உணவுக்கு ஊரில் உள்ள பெரிய நட்சதிர உணவகம் ஒன்று கு வர செய்தான்.

லோகு நண்பர்கள் வந்தனர். அவர்களிடமும் நிலைமையை விளக்கினான். அவர்களுள் நான்கு நண்பர்கள் ஒப்புக்கொண்டனர். “தேன்க யு பிரண்ட்ஸ், ஐ வில் அப்டேட் மோர் இன்போ” என்று கூற அனைவரும் உணவு முடித்துவிட்டு கிளம்பினர்.

இரவு, வீடு வந்ததும், லோகு ராக்கி ஐ அழைத்தான்.

லோகு: “மச்சி, நம்ம பிரண்ட்ஸ் 4 பேரு ஓகே சொல்லி இருக்காங்க டா”

ராக்கி: “கிரேட் டா, நான் காண்டக்ட் பண்ணதுல, 6 பேரு பேரு ஓகே டா”

லோகு: “நம்ம நெனச்ச மாறியே 10  பேரு வந்துட்டாங்க டா. பட் நான் இன்னைக்கு நைட் எ கேடைப்பங்க நு எதிர் பாக்கல டா”

ராக்கி: “தட் இஸ் பிரண்ட்ஸ் மச்சி J”

லோகு: “சரி டா, அவங்கள எப்ப எங்க வர சொல்றது?”

ராக்கி: “நம்ம ஆபீஸ் கே வர சொல்லலாம் டா. இப் இட் இஸ் பைன், 2 நாள் ல வர சொல்லலாம் டா. ஐ மீன், புதன் கிழமை டா.”

லோகு: “ஓகே டா. நான் நாளைக்கே முருகா அண்ணா வ வரசொல்லி நம்ம பிரண்ட்ஸ் வேல பாக்க cabin ரெடி பண்ண சொல்றேன் டா.”

ராக்கி: “சூப்பர் டா”

லோகு: “நான் இப்பவே நம்ம பிரண்ட்ஸ் கு இன்போ பாஸ் பண்றேன், நீயும் பண்ணிரு டா”

ராக்கி: “டன்”

லோகு: “சரி டா, குட் நைட்”

ராக்கி: “ஹ்ம்ம், குட் நைட் டா”

இணைப்பு துண்டிக்க பட்டது. ராக்கி யும், லோகு வும் உடனே நண்பர்களை தொடர்பு கொண்டு புதன் கிழமை தங்கள் அலுவலகம் வர சொன்னனர்.

இருவரும், நண்பர்களின் வரவை எதிர் நோக்கி மகிழ்ச்சியில் இருந்தனர்.


தொடரும்..!

About The Author

It's me, Nivas Baskaran , a product of the 90's living in Bangalore. This is my personal blog and I'm here to post some cool stuffs. I love spending time with my Friends. Jovial in nature. I love Tea/Coffees. Ping me to know more about me :P

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *


Subscribe for Updates

Like Us on Facebook

Categories