Select Page

XPlorer – Chapter 1

இன்று… காலை 6 மணி…. நீராவி படிந்த ஒரு கண்ணாடியில் ஒரு மங்கலான உருவம்…. அவர் தான் இந்த கதையின் கதாநாயகன்… பெயர் ராகேஷ்… சுருக்கமாக ராக்கி என்று அழைக்கபடுவான்….

கண்ணாடியில் படிந்த நீராவியை தன் கையால் துடைக்க தெளிவாக தெரிகிறது அவன் முகம்… 27 வயது நிரம்பிய இளைஞன்….. சீப்புக்கு அஞ்சி கூனி குறுகி சுருண்டு போகாத தலை முடி… வாயை சுற்றி வட்டம் வரைந்தது போல குறுந்தாடி… அழவான உடல்… மா நிறம்… இந்த காலத்துக்கு ஏத்த புதுமையான தோற்றம்… தெளிவான சிந்தனை உடையவன் என்பது அவனை பார்த்தாலே புரியும்..

கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தில் கத்திரி வைத்து தாடி சரி செய்து கொண்டிருதான்… “இப்ப ok டா ராக்கி… பாக்க சும்மா கலக்கலா இருக்க டா” என்று தனக்கு தானே பேசிக்கொண்டு குளிக்க சென்றான்….

குளித்த பிறகு எந்த உடை அணிவது என்று யோசித்து கொண்டு இருந்தான்.. அப்போது…”கிரர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று ஒரு சத்தம் கேட்டது… “குமரனின்” மேசை கடிகாரதிளிருந்து….. ராக்கி இன் தம்பி குமரன்… எழுந்ததும் தன் அண்ணனை பார்த்து “டேய்.. என்ன டா.. ஒரே அதிசயமா இருக்கு…. நல்ல நாளிலேயே காலேல 10 மணிக்கு மேல தான் முழிப்ப… இப்ப என்ன டா.. 7 மணிக்கு குளுச்சு கெளம்பிட்டு இருக்க????”

ராக்கி “எனக்கு ஒரு முக்கியமான வேல இருக்குடா கும்ஸ்…. நீ தூங்கு ராசா…” என்று கூறிவிட்டு உடுத்த உடை தேர்வு செய்தான்…..

நீல நிற ஜீன்… டி-ஷர்ட் அணித்து கிளம்பினான்…..

ராக்கி : “அம்மா… நான் லோகு வீட்டுக்கு போறேன் மா… வர சாய்ங்காலம் ஆகும்”

அம்மா : “இருடா டிபன் ரெடி பண்றேன்… கொஞ்சமா சாப்புட்டு போடா…”

ராக்கி : “இல்ல மா… டைம் ஆச்சு… கெளம்புறேன்.. வெளில சாப்புட்டுகிறேன்…”

அம்மா : “சரி டா… பாத்து போய்டு வா டா”

ராக்கி : “சரி மா.. டாட்டா.. சி யு…”

கும்ஸ் எழுந்து பல் துலக்கி கொண்டே வந்தான்…. “அம்மா… அண்ணனுக்கு என்ன மா ஆச்சு… சீக்கரம் கெளம்பி எங்கயோ போறான்…?? அது மட்டும் இல்ல.. கொஞ்ச நாளாவே genius ஒரு டைப் ஆ தான் மா பேசுறான்.. என்னன்னமோ சொல்றான்… எனக்கு ஒன்னும் புரியல….”

அம்மா “எனக்கும் என்ன நு தெரியல டா… பைத்தியம் மாறி பேசுறான். பாக்கலாம், என்ன நடக்குதுன்னு”.

லோகு…. ராக்கி இன் நெருங்கிய நண்பன்…. இருவரும் வாயில் விரல் சூப்பி கொண்டு இருந்த காலத்தில் இருந்துஒன்றாக இருப்பவர்கள்… ஒரே பள்ளி… ஒரே காலூரி… இன்ஜினியரிங் முடித்து விட்டு சொந்தமாக ப்ராஜெக்ட் சென்ட்டர் வைத்து நடத்தி கொண்டு இருக்கிறார்கள்… லோகு பரம்பரை ஒரு பணக்கார பரம்பரை… ப்ராஜெக்ட் சென்ட்டர் துவங்க அவனே முதலீடுசெய்தான்…

மணி 8…. லோகு வின் வீட்டுக்கு வந்தான் ராக்கி.

ராக்கி “லோகுகுகுகு… கேளம்பிட்டயா டா” என்று கூவிக்கொண்டே நுழைந்தான். “ஹாய் நா.. என்று தன் கையை காட்டினாள் பார்வதி” லோகு வின் தங்கை… “ஹாய் தங்கா..” என்று சொல்லி விட்டு மாடி படி ஏறி லோகு வின் அறைக்கு சென்றான் ராக்கி…

“மச்சி.. எல்லாம் ரெடி ஆ டா….” என்று ராக்கி கேட்க, தன் கையை facebook லைக் பொத்தான் போல காட்டினான்லோகு…

லோகு: “ராக்கி.. Presentation கு நல்ல prepare பண்ணிடாய டா…??”

ராக்கி: “என்ன டா prepare பண்றது… அதெல்லாம் தானா வரும்…”

லோகு: “சரி மச்சி… 9 மணிக்கு எல்லாரும் வந்துருவாங்க… கெளம்பலாமா???”

ராக்கி: “எஸ் மச்சி… ஐ அம அல்வேஸ் ரெடி..”

இருவரும் கிளம்பினர்…. ராக்கி அங்கே லோகுவின் மேசை மேலே இருந்த சிகப்பு நிற பந்து போன்ற ஒன்றை எடுத்து கையில் உருட்டி கொண்டே வந்தான்…

இருவரும் ஒரு இரு சக்கர வாகனத்தில் கிளம்பினர்…..


தொடரும்..!

About The Author

It's me, Nivas Baskaran , a product of the 90's living in Bangalore. This is my personal blog and I'm here to post some cool stuffs. I love spending time with my Friends. Jovial in nature. I love Tea/Coffees. Ping me to know more about me :P

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *


Subscribe for Updates

Like Us on Facebook

Categories