
XPLORER – CHAPTER 2
லோகு வீட்டை விட்டு கிளம்பிய இருவரும் அவர்களுடைய ப்ராஜெக்ட் சென்டர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
ராக்கி: “லோகு பசிக்குது டா. சாப்புட்டு போலாமா?”
லோகு: “டைம் என்ன டா ஆச்சு?”
ராக்கி: “8.15 டா”
லோகு: “சரி டா.. நேரம் இருக்கு… அப்படியே போற வழில நம்ம அய்யர் கடைல சாப்புட்டு போலாம் டா”
ராக்கி: “கிரேட் மச்சி… வைத்துல milk அ வாத்த :)”
இருவரும் வண்டியை நிறுத்திவிட்டு கடைக்குள் நுழைந்தனர். லோகு உள்ளே சென்று கை கழுவும் இடத்தில் திரும்பி பார்க்க ராக்கி ஐ காணவில்லை. “பின்னாடியே தான வந்தான். எங்க போனான் இந்த பையன்” என்று தேடி சென்றான்.
ராக்கி கடையின் வாயிலில் வைக்க பட்டு இருந்த கரும் பலகை ஐ வாயில் நீர் வழிய படித்து கொண்டு இருந்தான்.
ராக்கி: “இன்றைய ஸ்பெஷல்….
முந்திரி ரவா தோசை
இடியாப்பம் & தேங்காய் பால்
நெய் பொங்கல்
சாம்பார் இட்லி
தயிர் வட”
லோகு: “டேய்., இங்க என்ன டா பண்ற.. உள்ள வா நாயே”
ராக்கி: “இதோ வந்துட்டேன்”
இருவரும் உள்ளே சென்று ஒரு மூலையில் பள பள என துடைத்து வைத்த ஒரு மேசையின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தனர்.
ஒரு முதியவர் அருகில் வந்து “என்ன சாப்புடுறேங்க தம்பி?” என்று கேட்க, யோசனை சிறிதும் இன்றி ராக்கி “முந்திரி ரவா தோசை” என்றான். லோகு, “எனக்கு இட்லி” என்று கூற முதியவர் “ஒரு 5 நிமிஷம் ஆகும் தம்பி” என்று நடையை கட்டினர்.
உணவு வரும் வரை ஒரு இருவரும் பேசி கொண்டு இருந்தனர்.
லோகு: “ராக்கி, எல்லாம் நல்ல படியா நடக்குமா டா?”
ராக்கி: “எல்லாம் நல்லதே நடக்கும் டா… ஆல் இஸ் வெள்.. ”
லோகு: ”இல்ல டா… நாம சொல்றத அவங்க எப்படி எடுத்துக்க போறாங்க நு தெரியல டா.. அதான்…”
ராக்கி: “எனக்கும் தாண்டா… எங்க வீட்டுல இப்பவே எனக்கு பைத்தியம் புடுசுருச்சு நு நெனைக்குரங்கா… விட்டா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயிருவாங்க போல டா”
லோகு: “ஆமா டா.. இப்ப கேக்கபோரவங்களும் அப்படியே நெனச்சா என்ன டா பண்ணுறது??”
ராக்கி: “சிம்பிள் டா… சொல்றத சொல்லுவோம்.. நம்புனா நம்பட்டும்.. நம்பாட்டி போறாங்க.. நமக்கு எந்த நஷ்டமும் இல்ல டா நண்பா”
சுட சுட உணவு வந்தது. இருவரும் சாப்பிட துடங்கினர். சாப்பிட்டு, அதற்கான தொகையை செலுத்தி வெளிய சென்றனர். “லோகு, நீ போய் வண்டிய ஸ்டார்ட் பண்ணு, வந்துறேன்” என்று கூறி ராக்கி கடைக்குள் வேகமாக சென்றான். எதையோ மறந்தது போல ஒரு வேகம்.
லோகு வண்டிய கெளப்ப ஓடி வந்து பின்னே அமர்ந்தான் ராக்கி.
லோகு: “என்னடா ஆச்சு.. ஏதோ மறந்த மாறி வேகமா உள்ள போயிட்டு வர?”
ராக்கி: “ஆமா மச்சி, மறந்துட்டேன்”
லோகு: “என்னத்தடா மறந்த? உள்ள போகும் போது கைல எதும் கொண்டு வரலையே நீ!!!”
ராக்கி: “எலி புழுக்க மிட்டாய் டா…!!!!” என்று தன் கையை காட்டினான்
(கையில் சர்க்கரை ஆல் போர்த்த பட்ட சோம்பு)
லோகு: “இவன் ஒருத்தன்… எங்க போனாலும் இத விட மாட்டான்”
இருவரும் வண்டியை வேறு எங்கும் நிறுத்தாமல் நேராக ப்ராஜெக்ட் சென்டர் நோக்கி சென்றனர். வண்டியை அதற்க்கான இடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர்.
நுழைவாயில் மேல ஒரு அழகான பலகை இருந்தது. அதில் “நியூ வேர்ல்ட் ப்ராஜெக்ட் சென்டர்” என்று பொறிக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்ற இருவரும் இடத்தை சுத்தம் செய்து presentation கு ஆயுத்தப்படுத்தி கொண்டு இருந்தனர்.
Presentation செய்ய ஒரு மேடை. மேடையின் பின்புறம் பெரிய திரை இருந்தது. நின்று பேச விசாலமான இடம். மேடையின் கீழே ஒரு மேசை. அதன் மேல் ஒரு கணினி, திரையில் படம் காட்ட ஒரு ப்ரொஜெக்டர் இருந்தது.
ராக்கி மேடையில் நிற்க, லோகு கணினியில் அமர்ந்து எல்லாம் சரியாக இயங்குகிறதா என்று ஒத்திகை பார்த்தனர்.
தொடரும்..!