Select Page

XPLORER – CHAPTER 3

மணி சரியாக 8.55. கூட்டம் கூட்டமாக அரங்கிற்குள் ஆட்கள் வர தொடங்கினர். லோகுவும், ராக்கியும் அவர்களை வரவேர்த்து இருக்கைகளில் அமர வைத்தனர். வருகிற அனைவரும் கழுத்தில் வண்ண வண்ண பட்டை வடிவ டாக்(tag)அணிந்து இருந்தனர்.

 வந்தவர்கள் கையில் கேமரா, வாய்ஸ் ரெகார்டர், குறிப்பு எழுத ஏதுவாக ஒரு புத்தகம் வைத்து இருந்தனர். பார்க்க ஊடக நண்பர்கள் போல தெரிந்தது. வந்தவர்கள் எதற்காக அவர்களை அழைத்தனர் என்று புரியாமல் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர்.

 நபர் 1: “எதுக்காக நம்மல இங்க வர சொல்லி இருகாங்க நு தெரியுமா?”

நபர் 2: “நீங்க பிரஸ்(press) ஆ?”

நபர் 1: “ஆமா சார்”

நபர் 2: ”எதோ காது குத்து விழா நடக்க போகுதாம், போட்டோ எடுத்து மொதோ பக்கத்துல போடுங்க சார்.”

நபர் 1: “ஹலோ, என்ன பாத்தா கிண்டலா தெரியுதா? தெருஞ்சா சொல்லுங்க இல்லனா தெரியல நு சொல்லுங்க சார். மேன்னர் லெஸ் பெல்லொவ்”

நபர் 2: “ சார், உங்க கூட தான நானும் வந்தேன், அப்பறம் எனக்கு மட்டும் எப்படி சார் தெரியும். வெயிட் பண்ணுங்க சார். இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிய போகுது”

 இது போல பல பேர் பல யூகங்கல்செய்து கொண்டு இருந்தனர். கூட்டத்தை உற்று கவனித்தால் “ஏதோபுது ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ண போறாங்க போல பா”, “இவங்க கம்மி விலை கு போன் தயாருச்சு விக்க போறாங்க யா”, “இல்லேங்க ஏதோரோபோ கண்டு புடுச்சு இருக்காங்க இவங்க. அத காட்ட போறாங்க நு நெனைக்குறேன்” என்று பல்வேறு குரல்கள் பல கோணத்தில் ஒலித்தது.

அரங்கம் முழுவதும் சலசலத்தது. ராக்கி மேடை ஏறி அனைவரின் கவனத்தை ஈர்த்தான். மின்வெட்டு ஆனா தொழிற்சாலை போல அரங்கமே மயான அமைதி அடைந்தது. ஊடக நண்பர்கள் கேமரா, ரெகார்டர் போன்ற கருவிகள் அனைத்தையும் பதிவு செய்ய தாயார் நிலையில் வைத்தனர்.

 “ஹலோ கைய்ஸ். ஐ வெல்கம் யு ஆல்” என்று கூறி தன் உரையை துடங்கினான். லோகு மேடையின் கீழே இருந்து ராக்கி ஐ நோக்கி தன் கை கட்டை விரலை காட்டி வாழ்த்து தெரிவித்தான். ராக்கி லோகுவை பார்த்து லேசாக தலையை ஆட்டி பேசத்தொடங்கினான். லோகு அவன் பேச்சுக்கு ஏற்ற வாறு திரையில் தகவல் வர கணினியை இயகிக்கொண்டிருந்தன்.

 “பிரண்ட்ஸ், நாங்க இப்ப உங்க கிட்ட ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் பத்தி பேச போறோம். நீங்க எங்கள பைத்திய காரங்க நு கூட நெனைக்கலாம். ஆனா, நாங்க பேசுறத ஒரு 1  மணி நேரம் அமைதியா கேளுங்க. அப்பறம் நாங்க சொல்றத நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்.

 நீங்க எல்லாம் உள்ள வரும் போதே வெளில இருந்த போர்டு ஐ பாத்து இருப்பேங்க. ‘நியூ வேர்ல்ட் ப்ராஜெக்ட் சென்டர்’. நீங்க நெனைக்குற மாறி ஸ்கூல் பசங்குளுக்கு தெர்மோகோல் ல போம்மா வீடு செஞ்சு தரத்தோ, இல்ல ஆர்ட்ஸ் காலேஜ் பசங்களுக்கு டம்மி மாடல் செஞ்சு தரத்தோ, இல்ல இன்ஜினியரிங் பசங்களுக்கு சுவிட்ச் அஹ போட்டா லைட் எரியற ஒரு டப்பா செஞ்சு பல நேம் வச்சு ஒரே ப்ராஜெக்ட் அஹ விக்கற ப்ராஜெக்ட் சென்டர் இல்ல இது. நாங்க பண்ற ப்ராஜெக்ட் லாம் பெருசு. இஸ்ரோ, நாசா நு பல நிறுவனகளுக்கு நாங்க ப்ராஜெக்ட் செஞ்சு தரோம். அது மட்டும் இல்லாம பல விசயங்கள நாங்களா எக்ஸ்ப்ளோர் பண்ணுறோம்.

 இந்த உலகத்துல இருக்கற அறிவாளிகல நீங்க Scientist நு சொல்லுறேங்க. நாங்க Scientist இல்ல. எங்களுக்கு நாங்க வச்சு இருக்கற பேரு Explorer. Scientist ஓட சிந்தனை கும் எங்க சிந்தனை கும் நெறைய டிபரன்ஸ் இருக்கு. எங்களுக்கு காசு, பேரு ல விருப்பம் இல்ல. அதுனால இதுவரைக்கும் நாங்க பண்ண எதையும் வெளில சொல்லல. எங்க மன நிறைவுக்காக வேல பாக்குறோம். இப்ப மட்டும் எதுக்கு டா சொல்ற நு நீங்க கேக்கலாம். இப்ப சொல்லி தீர வேண்டிய கட்டாயத்துல இருக்கோம். நாங்களும் மனிதாபிமானம் உள்ள ஒரு சாதாரண மனுஷன் தான்.

 சும்மா நாங்க எதையாவது சொன்னா நீங்க நம்ப மாட்டேங்க. நான் சில விஷயங்கள் சொல்லிட்டு அதுக்கு அப்பறம் மேட்டர் கு வரேன். அப்பா தான் உங்களுக்கு புரியும். ஏனா நீங்க கேள்வி படாத சில டெர்ம்ஸ் லாம் வரும்.

 உங்களுக்கு தெருஞ்சு உலகத்திலேயே வேகமா போக கூடியது போட்டான். அதாவது ஒளி. ஒளி ஓட வேகம் 299792.458 km/s. ஆனா, அதுக்கு மேல வேகமாக போக கூடிய ஒரு பார்டிகள் நாங்க கண்டு புடுச்சு இருக்கோம். அதுக்கு நாங்க வச்சு இருக்கற பேரு ‘Exfa’. இதோட வேகம் 2.5 x 1012 km/s. இந்த ‘Exfa’,போட்டான் ஆ விட 8339102.37 மடங்கு வேகமா போகும்.

 உதாரணம் சொன்ன உங்களுக்கு ஈசி யா புரியும். ‘Proxima Centauri’ ங்கறது தான் சூரியனுக்கு பக்கத்துல இருக்கற நட்க்ச்சதிரம். இது சரியா 4.01325075 × 1013 km தொலைவுல இருக்கு. ஒளி ஓட வேகத்துல போனா அந்த நட்க்ச்சதிரத்துக்கு போக 4.2421 வருஷம் ஆகும். ஆனா ‘Exfa’ வெறும் 16 நொடி ல போகும். அந்த அளவு வேகமா போக கூடிய துகள் இது.

 நாங்க இந்த ‘Exfa’ பார்டிகல்ஸ் வச்சு ஒரு பாக்ஸ் செஞ்சோம். ஐ மீன் உங்களுக்கு புரியரமாரி சொல்லனுமா ஒரு ‘satellite’ செஞ்சோம். அத சரியான முறைல தூண்டி விட்டா அதே வேகத்துல எங்கயும் பயணிக்கும். அத நாங்க ‘space‘ க்கு அனுப்பி புதிய கிரகங்கள எக்ஸ்ப்ளோர் பண்ணலாம் நு முடிவு பண்ணி அனுப்சோம். இத நம்ம Scientist அனுப்பிய satellite காமச்சு குடுத்து இருக்குமே நு நீங்க கேக்கலாம். ஆனா இதோட வேகம் ரொம்ப அதிகம். 4 வருஷம் ஒளி போகாக்குடிய தூரத்த 16 நொடி ல அடையும். அதுனால satellite நாலா இத கண்டு பிடிக்க முடியல. இத நம்ம milky way galaxy ல ஒரு பாதை நிர்ணயம் இல்லாம போக வச்சு அங்க தெரியரத வச்சு ஆராய்ச்சி பண்ணோம். அதுல ஒரு சாக்கிங் ஆனா ஒரு விசியம் தெரிய வந்து இருக்கு.

universeFig 1: Universe

உங்களுக்கு பின்னாடி திரைல ஒரு படம் (figure 1) தெரியுதா? இது நம்ம universe ஓட ஒரு பகுதி. இத தான் நாம பிரபஞ்சம் நு சொல்றோம். இந்த universe ல கோடிக்கான galaxy இருக்கு. நம்ம சூரிய குடும்பம் இருக்கற galaxy பேரு milky way galaxy (பால்வழி மண்டலம்).  அந்த milky way galaxy ல இருக்கற ஒரு சிறிய பகுதி, அதாவது நம்ம பூமி ஓட ஒப்பிடும்போது நம்ம கண்ணனுக்கு தெரியாத கிருமி எப்படியோ அதுபோல ஒரு சிறிய பகுதி தான் நம்ம சூரிய குடும்பம். Milky way galaxy (figure 2) ஓட படாத நீங்க திரைல பாக்கலாம்.

The Milky Way, it turns out, is no ordinary spiral galaxy. According to a massive new survey of stars at the heart of the galaxy by Wisconsin astronomers, including professor of astonomy Edward Churchwell and professor of physics Robert Benjamin, the Milky Way has a definitive bar feature -- some 27,000 light years in length -- that distinguishes it from pedestrian spiral galaxies, as shown in this artist's rendering. The survey, conducted using NASA's Spitzer Space Telescope, sampled light from an estimated 30 million stars in the plane of the galaxy in an effort to build a detailed portrait of the inner regions of the Milky Way. Used with permission by: UW-Madison University Communications 608-262-0067 Illustration by: NASA/JPL-Caltech/R. Hurt (SSC/Caltech)

Fig 2: Milky Way Galaxy

இந்த படத்துல ‘sun’ நு போட்டு ஒரு அம்பு குறி போட்டு இருக்குல, அங்க தான் நாம சூரிய குடும்பம் இருக்கு. Scientists நெறைய ஆராய்ச்சி லாம் பண்ணி இப்ப தான் நாம சூரிய குடும்பத்துல பூமிக்கு பக்கத்துல இருக்கற செவ்வாய் கிரகத்துக்கு ஒரு ரோவர் அனுப்பி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க. அதுனால அவங்களால கண்டு பிடிக்க முடியாத விசியம் ஒன்னு தான் இது. ஏன்னா, நமக்க வர போற ஆபத்து சூரிய குடும்பத்துக்கு வெளில இருந்து.

 எங்க Exfa box அ milky way galaxy ல அனுப்பும் போது ஒரு விண்வெளி குப்பை வேகமா நம்ம milky way galaxy ஓட நடு பகுதி நோக்கி பயனிகரத பாத்தோம். அந்த குப்பை கு நாங்க ‘Trank’ நு பேரு வச்சு இருக்கோம். அது நாம சூரியன விட பல ஆயிரம் மடங்கு பெருசு. அந்த குப்பை பயணம் செய்யுற பாதைய ஓட pattern வச்சு பக்கும் போது, நம்ம சூரிய குடும்பத்த கடந்து போகும் நு தெரிய வந்து இருக்கு. அத நாங்க எங்க Exfa box ல இருக்கற ஒரு கேமரா வ வச்சு படம் எடுத்து அத கம்ப்யூட்டர் ல “Digital image Processing”  டெக்னாலஜி வச்சு ப்ராசெஸ் பண்ணி பாத்தோம். அந்த குப்பை ஓட மேல் பகுதி வழுவழு நு இருக்கு. ஒன்னு அது பனியா இருக்கனும், இல்லேனா அது எதாவது உலோகமாக இருக்கனும். அது இன்னும் நெறைய தூரம் தள்ளி இருகரனால அத பத்தி சரியான தகவல் தெரியல. நாங்க தொடர்ந்து கண்கானுசுட்டு வரோம். பட், ஒன்னு மட்டும் உறுதி அது கண்டிப்பா நம்ம சூரிய குடும்பத்த தாக்கும். அப்படி நடந்தா, அது தான் இருத்த உலகத்தோட கடைசி.

 சரி, நம்ம பூமி தான் அழிய போகுதே நம்ம மக்கள் வாழ வேறு எதாவது கிரகம் இருக்கானு பாத்தோம். அப்படி தேடும் போது நம்ம milky way galaxy லேயே வேறு 2 கிரகம் கண்டு பிடிச்சு இருக்கோம். அதுக்கு நாங்க வச்சு இருக்கற பேரு Farth & Darth.  பூமிய போலவே உயிரினங்கள் வாழ எல்லா தகுதியும் அந்த கிரகங்களுக்கு இருக்கு. அங்க வேற உயிரினம் இருக்கா இல்லையா நு நாங்க அடுத்து எக்ஸ்ப்ளோர் பண்ணனும்.

 வேற ஒரு கிரகம் இருந்தாமட்டும் எப்படி அங்க போறது நு உங்க எல்லாத்துக்கும் கேள்வி வரும். அதுக்கான விடைய தேடிட்டு இருக்கும். நெருங்கிட்டோம். சீகரம் கண்டு பிடிசுருவோம். ‘Teleportation’ டெக்னாலஜி பயன் படுத்தி ஒரு கருவி கண்டு பிடிச்சு இருக்கோம். அது பேரு ‘Gofar’. அது மூலம் உயிர் இல்லாத எந்த ஒரு பொருளையும் ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்ப முடியும். அதுல எப்படி உயிரினங்கலஅனுப்புறது நு எக்ஸ்ப்ளோர் பண்ணிட்டு இருக்கோம். கூடிய சீகரம் கண்டு பிடிச்சுடுவோம்.

 இது தான், நாங்க உங்க கிட்ட சொல்லவேண்டிய விசியம். வேற கிரகத்துக்கு போறது தான் எங்களுக்கு தெருஞ்ச ஒரே வழி. மேலும் டிடைல்ஸ் கெடச்சதும் உங்க கிட்ட அப்டேட் பண்றோம். இன்னும் துள்ளியமாகணக்கிட்டு எப்ப எங்க என்ன நடக்கும் நு உங்களுக்கு சொல்றோம். உங்களுக்கு எதாவது சந்தேகங்கள், கேள்விகள் இருந்தா கேக்கலாம்.” என்று ராக்கி உரையை முடித்தான்.

 ஊடக நண்பர்கள் அனைவரும் சிலை போல உறைந்து கிடந்தனர். சிறிய இடைவேளை விட்டு, ராக்கி “உங்களுக்கு எதாவது சந்தேகங்கள், கேள்விகள் இருந்தா கேக்கலாம்.” என்று அழுத்தி கூறினான்.


தொடரும்..!

About The Author

It's me, Nivas Baskaran , a product of the 90's living in Bangalore. This is my personal blog and I'm here to post some cool stuffs. I love spending time with my Friends. Jovial in nature. I love Tea/Coffees. Ping me to know more about me :P

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *


Subscribe for Updates

Like Us on Facebook

Categories