Select Page

XPLORER – CHAPTER 4

ஒரு ஊடக நண்பர் ராக்கி ஐ நோக்கி, “படம் சூப்பர் சார், எப்ப சார் ரிலீஸ் பண்ண போறேங்க? எவ்ளோ பட்ஜெட் சார்?” என்று கேட்டார். இன்னொருவர், “எங்களுக்கு லாம் சின்ன வயசுலேயே காது குத்தியாச்சு தம்பி” என்றார். மற்றொரு ஆங்கில ஊடக நண்பர் “வாட் தி பா*** மென்?? ஆர் யு கிட்டிங் அஸ்?” என்று பீட்டர் விட்டார். “ச்சே, காலங்காத்தால டைம் அ வேஸ்ட் பண்ணிட்டான் இந்த லூசே பய” என்று மற்றொருவர். இது போன்று அனைவரும் கூச்சலிட ஆரம்பித்தனர். ராக்கி சொன்னதை எவரும் நம்ப வில்லை போல தெரிந்தது. வெகு சிலர் நம்பலாமா இல்ல கூடாதா என்று ஆழ்ந்த சிந்தனைக்கு சென்றனர். நம்புபவர் எவரும் இல்லை.

ராக்கி “பிரண்ட்ஸ் ப்ளீஸ், நான் சொல்றத கேளுங்க இதெல்லாம் கதை இல்ல, நிஜம்”. அதற்கு ஒருவர் “என்னது கதை இல்ல நிஜம் அ? அதெல்லாம் ஏற்கவனே எல்லா சேனலையும் வேற வேற பேரு ல ஓட்டிட்டு தான் இருக்கு. நீங்க வாய மூடுங்க” என்று ஆக்ரோசமாக பேசினார்.

கோவம் தலைக்கு ஏறிய ஒருவர், “எங்கள பாத லூசு மாறி இருக்கா டா உங்களுக்கு?” என்று கேட்க, லோகு, “சார், இவ்ளோ நேரம் எல்லா அறிவு உள்ள மீடியா பெர்சன்ஸ் ஐயும் இங்க அமைதியா உக்கார வச்சு இருக்கோம். நாங்க லூசே இல்லன்னு இதுக்கு மேல உங்களுக்கு ஆதாரம் வேணுமா?” என்று பதிலுக்கு பேசினான். “இருங்க டா உங்கள என்ன பண்றேன் நு பாருங்க. இப்பவே போய் உலகம் புல்லா நீங்க பண்ண காமெடி அ டெலிகாஸ்ட் பண்ண போறேன். இனி இந்த உலகமே உங்கள பைத்தியம் நு தான் கூப்புட போகுது” என்று ஒருவர் எக்காலமிட்டார்.

மேடை மேல இருந்து ராக்கி சத்தமாக “எல்லாரும் உங்க கேமரா, வாய்ஸ் ரெகார்டர் ல ரெகார்ட் பண்ணாத ப்ளே பண்ணி பாருங்க. கேமரா ல கருப்பு ஸ்க்ரீன் தான் தெரியும், ரெகார்டர் ல கொர்ர்ர்ர் நு சவுண்ட் கேக்கும்.” என்று கூறினான். ஊடக நண்பர்கள் அனைவரும் தன் கேமரா வையும் ரெகார்டர் ஐயும் சரிபார்க, ராக்கி சொன்னது போலவே நடந்தது. ராக்கி “போங்க சார், முடுஞ்சா மீடியா ல போடுங்க சார் என்று கூறினான்”. அரங்கத்தில் இருந்த அனைவரும் ராக்கி ஐ உற்று ஆச்சிரியத்தோடு பார்த்தனர். ராக்கி தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து சிகப்பு நிற பந்து போன்ற ஒன்று எடுத்து காட்டினான். “இது ‘AV wall’. நாங்க உருவாக்குன ஒரு கருவி. இது ஆடியோ வீடியோ நு எதையும் ரெகார்ட் பண்ண விடாது. நீங்க ரெகார்ட் பண்ணது எல்லாம் டம்மி.” என்று சிறு புன்னகை ஓடு கூறினான்.

“இவ்ளோ நேரம் நாங்க சொன்னது எல்லாம் உங்க நல்லதுக்காக தான், நம்புனா நம்புங்க, இல்லேன சத்தம் இல்லாம கேளம்பி போங்க சார். எங்கள காப்பாதிக்க எங்களுக்கு தெரியும். விளைவுகள அனுபவிக்க போறவங்க நீங்க தான். நாங்க இல்ல. நாங்க எப்படியும் போலச்சுகுவோம்.” என்று லோகு கூற அனைவரும் மதில் மேல் உள்ள பூனை போல் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றனர்.

ராக்கி, “இப்ப யாரும் நம்பாதிங்க, நாங்க கூடிய சீக்கரம்என்ன நடக்க போகுது, எங்க நடக்க போகுது, எப்படி நடக்க போகுது நு விவரமா உங்களுக்கு ஈமெயில் அனுப்புறோம். நாங்க சொன்ன மாறி நடக்கும். அப்ப நம்புவீங்கள. நாங்க சொல்ற முதல் அறிகுறி நடந்ததும் ஒரு press meet நடத்துவோம், அப்ப வாங்க, இப்ப எல்லாரும் போகலாம் சார்” என்றான்.

அனைவரும் மிகுந்த குழப்பத்துடன் சலசலத்து கொண்டே கலைந்து சென்றனர். அனைவரும் சென்ற பிறகு ராக்கி யும் லோகு வும் சற்று வாடிய முகத்துடன் அமர்ந்தனர்.

ராக்கி: “மச்சி, ஒரு வழியா சொல்ல வேண்டியத சொல்லிட்டோம்.”

லோகு: “ஆமா டா, ஆனா யாரும் நம்பர மாறி தெரியலையே டா”

ராக்கி: “நம்புவாங்க டா.. கொஞ்ச நாள் ஆகும். அது நம்ம ஆளுகளுக்கு இருக்கற சாவம் டா J”

லோகு: “சாவமா? என்ன டா சாவம்?”

ராக்கி: “இல்ல டா, எப்பவுமே மனுசனுங்க நல்லது சொன்னாலும், உண்மைய சொன்னாலும் நம்பவே மாட்டானுக. அத சொன்னேன் டா”

லோகு: “கரெக்ட் மச்சி, எங்க ஆச்சி அடிக்கடி சொல்லும். உலகம் உருண்டை நு ஒருத்தன் சொல்லும்போது நம்மாளுங்க அவர துரத்தி ரவுண்டு கட்டி அடுசாங்கலாம்”

ராக்கி: “அது தான் மச்சி இங்க நடக்குது. சரி விடு டா, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நம்ம வேலைய பாக்கலாம்.”

லோகு: “ஓகே டா நண்பா”

இருவரும் அரங்கை சுத்தம் செய்துவிட்டு தன் அடுத்த வேலைக்கு ஆயத்தம் ஆனார்கள்.


தொடரும்..!

About The Author

It's me, Nivas Baskaran , a product of the 90's living in Bangalore. This is my personal blog and I'm here to post some cool stuffs. I love spending time with my Friends. Jovial in nature. I love Tea/Coffees. Ping me to know more about me :P

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *


Subscribe for Updates

Like Us on Facebook

Categories