
XPLORER – CHAPTER 6
புதன்கிழமை காலை ஏழு மணி. ராக்கி எழுந்து குளித்து வழக்கம் போல் அலுவலகத்துக்கு கிளம்பினான். நண்பர்கள் வர இருப்பதால் இன்று கொஞ்சம் உற்சாகமாக கிளம்பினான். குளித்த உடன் லோகு கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தான். மறுபக்கம் லோகு, அயர்ந்த தூக்கத்துடன், லோகு: “சொல்லு டா” ராக்கி: “டேய் எரும, இணைக்கு நம்ம பிரண்ட்ஸ் லாம் ஆபீஸ் வராங்க டா.” லோகு: “தெரியும் டா… அதுக்கு என்ன டா?” ராக்கி: “இன்னும் கெளம்பலையா டா நீ??” லோகு: “மணி இப்ப தான் டா 7 ஆகுது… அவங்கலாம் 9 கு தாண்டா வருவாங்க. வழக்கம் போல எட்டு மணி வர தூங்கிட்டு அப்பறம் கெளம்புறேன் டா.” ராக்கி: “நீ என்ன கருமமோ பண்ணு… பட் 9 கு கரெக்ட் அஹ வா டா..” லோகு: “ஒகே.. குட் நைட்” ராக்கி: “டேய், வரும் போது நம்ம கம்பெனி ஷர்ட் போட்டுட்டு வாடா. அத சொல்ல தான் கால் பண்ணேன்” லோகு: “அதுவா? தொவைகவே இல்ல அத… பரவால, போட்டுட்டு வரேன்… நீ போன் அ வை டா மொக்க போடாம” ராக்கி: “சரி. பாய்”. பிறகு, கிளம்பி, சீவி சிங்கரித்து கொண்டு, ராக்கி தன் அம்மா சுட்ட தோசையை சாப்பிடுகொண்டிருந்தான். அப்போது, நண்பர்கள் தொலைபேசியில் அழைத்தனர். நண்பன்: “ராக்கி, இப்ப நாங்க பஸ் ஸ்டான்ட் பக்கத்துல இருக்கோம். இங்க இருந்து எப்படி டா வரது? வழி சொல்லு டா” ராக்கி: “மச்சி, அங்க பஸ் வெளில வர இடத்துக்கு வா. left ல பாரு, ருக்கு ஹோட்டல் இருக்கும், அதுக்கு முன்னாடி நெறைய ஷேர் ஆட்டோ இருக்கும். அதுல ஏறி, சக்தி தியேட்டர் ஸ்டாப் ல இறங்கு. எறங்கி, கொஞ்ச தூரம் நடந்து வந்தா நியூ வேர்ல்ட் ப்ராஜெக்ட் சென்ட்டர் நு போர்டு இருக்கும். அதாண்டா” நண்பன்: “ஒகே டா..வி வில் meet யு தேர்” என்று தொலைபேசி துண்டிக்க பட்டது. ராக்கி, உணவை முழுவதுமாக உண்டு கிளம்பினான். சரியாக, மணி 8.34. ராக்கி அலுவலகம் வந்து சேர்ந்தான். நண்பர்கள் வர இருப்பதால், அவர்கள் வரவை எதிர்நோக்கி குட்டி போட்ட பூனை போல வாசலுக்கும் தன் அரைக்கும் நடந்து கொண்டே இருந்தான். 8.57 மணி கு அவசர அவசரமாக லோகு வந்தான். “ராக்கி, எல்லாம் வந்துட்டாங்களா டா? செம டிராபிக் டா.. அதான் லேட்” என்று ராக்கி கேக்காமலே காரணம் கூறினான். ராக்கி, “டேய், அவங்க நாம பிரண்ட்ஸ் டா. வழக்கம் போல இணைக்கும் லேட் தாண்டா… இன்னும் 30 நிமிசமாவது கலுச்சு தாண்டா வருவாங்க.” லோகு “வெள் செட் டா” என்று புன்னகைதான். இருவரும் நண்பர்களுக்காக காத்து கொண்டிருந்தனர். தொடரும்..!